search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக்கோப்பை ஹாக்கி"

    • இந்த போட்டியில் தொடக்கம் முதல் ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தியது.
    • ஆட்ட நேர முடிவில் 3 - 0 என ஜப்பான் அணியை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி பெற்றது.

    புவனேஸ்வர்:

    15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நேற்று முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

    அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், 'சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி - ஜப்பான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதல் ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 3 - 0 என ஜப்பான் அணியை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி பெற்றது.

    புவனேஷ்வரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #WorldCupHockey
    புவனேஷ்வர்:

    14-வது உலககோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா தலைநகர் புவனேஷ்வர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டி இன்று  இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் நெதர்லாந்து- பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. நெதர்லாந்து அணி 7-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது. பெல்ஜியம் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    நெதர்லாந்து அணி 4-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி 1973, 1990, 1998-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. 3 முறை இறுதிப்போட்டியில் (1978, 1996, 2012) தோற்று இருந்தது.

    நெதர்லாந்து அணி ‘லீக்’ ஆட்டங்களில் 7-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும், 5-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் வீழ்த்தி இருந்தது. ஜெர்மனியுடன் 1-4 என்ற கணக்கில் தோற்றது. 2-வது சுற்றில் 5-0 என்ற கணக்கில் கனடாவையும், கால்இறுதியில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவையும் தோற்கடித்தது. அரைஇறுதியில் 4-3 என்ற கணக்கில் (பெனால்டி ஷூட்) நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

    பெல்ஜியம் அணி ‘லீக்’ ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் கனடாவையும், 5-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தியது. இந்தியாவுடன் 2-2 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. 2-வது சுற்றில் பாகிஸ்தானை 5-0 என்ற கணக்கிலும், கால்இறுதியில் ஜெர்மனியை 2-1 என்ற கணக்கிலும், அரை இறுதியில் இங்கிலாந்தை 6-0 என்ற கணக்கிலும் தோற்கடித்தது.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. இதனால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3-வது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மாலை 4.30 மணிக்கு மோதுகின்றன.
    ×